| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3209 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் விலக்ஷணரான வைதிக அக்ரேஸருடைய அக்னி ஹோத்ர பூமமானது ஆகாசத்தை மறைக்கும் திரு வல்ல வாழில் நிரதிசய போக்ய பூதனானவனை நம் கண்கள் காண்பது என்றோ என்கிறாள்.) 5 | நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ் கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5 | நல் நலம் தோழியீர்காள்,Nal nalum thozhieerkal - சிறந்த நேசமுள்ள தோழிகளே! நல்ல அந்தணர் வேள்ளி புகை,Nalla andhanar vellai pugai - வைதிக ப்ரஹ்மணர்கள் செய்யும் யாகங்களிலுண்டான புகை மை நலம் கொண்டு,Mai nalam kondhu - ஸமயீனுடைய நல்ல நிறத்தைக்கொண்டு உயர் விண் மறைக்கும்,Uyar vin maraikkum - உயர்ந்த ஆகாசத்தை மறைக்குமிடமான தண் திருவல்லவாழ்,Than thiruvallavaazh - குளிர்ந்த திருவல்லவாழிலே எழுந்தருளியிருப்பவனும் கன்னல் அம்கட்டி தன்னை,Kannal amkatti thannai - கோதற்ற கன்னற்கட்டி போன்றவனும் கனியை,Kaniyai - பரிபக்குவமான பழம்போன்றவனும் இன் அமுதம் தன்னை,In amudham thannai - இனிய அமுதமாயிருப்பவனும் என் நலம் கோள்,En nalam kol - என்னுடைய ஸர்வல்லத்தையும் கொள்ளை கொண்டவனும் சுடரை,Sudarai - (அத்தாலே) ஒளிபெற்று விளங்குபவனுமான எம்பெருமானை கண்கள்காண்பது என்று சொல்,Kangal kaanpadhu endru sol - எனது கண்கள் காணப்பெறுவது எந்நாளோ? |