திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3210 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3210திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -பாடுகிற வண்டும் புதுக் தென்றலுமான கடற்கரைச் சோலையையுடைய திரு வல்ல வாழிலே நிற்கிற ஆஸ்ரித அர்த்தமாக வர்த்தியான ஸ்ரீ வாமனனுடைய போக்யமான திருவடிகளைக் காண்பது என்றோ என்கிறாள்.) 6
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்! பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும் சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ் மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6
பதவுரை Show / Hide
கனி காய் மடவீர்,Kani kaay madaveer - கனிபோன்ற வாயையுடைய தோழிகளே!
எங்கும்,Engum - எங்குப்பார்த்தாலும்
பாண் குரல் வண்டினோடு,Paan kural vandinodu - காளரூபமான மிடற்றோவரவையுடைய உண்டுகளும்
பசுதென்றலும் ஆகி,Pasuthendralum aagi - புதுத்தென்றதுமாய்
சேண் சினை ஓங்கு மரம்,Senn sinai oongu maram - உயர்ந்த பனைகளையுடைந்தாய்க்கொண்டு வளருகிற மாசுகளையுடைய
செழு கானல் திருவல்லவாழ்,Sezu kaanal thiruvallazh - அழகிய கடற்கரைச் சோலையையுடைத்தான திருவல்லவாழிலே நிற்கிற
மாண்குறள் கோலம் பிரான்,Maangkural kolam piran - சிறந்த ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனான எம்பிரானுடைய
தாமரை மணபாதங்கள்,Thaamarai manapadhangal - தாமரைமலர்போன்ற திருவடிகளை
வினையேன்,Vinaiyen - பாவியாகிய நான்
காண்பது,Kaanpadhu - ஸேவிக்கப்பெறுவது
எஞ்ஞான்று கொலோ,Yennaanru kolo - என்றைக்கோ