| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3212 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -அழகிய விளை நிலங்களாலே சூழப்பட்ட திரு வல்ல வாழிலே நித்ய வாசம் பண்ணுகிறவனுடைய சகல சம்ச்லேஷ ஸ்வ பாவமான திருவடிகளை நிரந்தர அனுபவம் பண்ணக் கூடுமோ என்கிறாள்.) 8 | நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்! ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும் மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8 | நல் நுதநீர்,Nal nuthaneer - அழகிய நெறியையுடைய தோழிகளே! எங்கும்,Engum - எவ்விடத்திலும் ஆடு உறு தீம் கரும்பும்,Aadu uru theem karumbum - ஆலையிலிட்டு ஆடுதற்குரிய இனிமையான கரும்புகளும் வினை செந்நெலும் ஆகி,Vinai chennelum aagi - முதிர விளைந்த செந்நெறி பயிர்களுமாய் மாடு உறு பூ தடம் சேர்,Maadu uru poo thadam ser - பக்கங்களில் நெருங்கிய பூத்த தடாகங்களையுடைத்தாய் வயல் சூழ்,Vayal soozh - கழனிகளாலே சூழப்பட்ட தண் திருவல்லவாழ்,Tham thiruvallazh - குளிர்ந்த திருவல்ல வாழிலே நீடு உறைகின்ற பிரான்,Neetu uraikindra piran - நித்யவாஸம் செய்தருளா நின்ற எம்பெருமானுடைய நிலம் தாவிய நீள் கழல்,Nilam thaaviya neel kazhal - பூமி முழுவதையு மொருகால் தளந்துகொண்ட நீண்ட திருவடிகளை நாள்தோறும் வீடு இன்றியே,Naal thorum veedu indriye - நாடோறும் விச்சேதமில்லாமல் தொழ கூடும் கொல்,Thoza koodum kol - தொழ நேருமோ? |