திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3213 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3213திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நம்முடைய கழலுகிற வளைகள் பூர்ணமாம் படி-பூரிக்க – அவனைக் கண்டு தொழலாம் படி அவன் அருள் கூட வற்றே என்கிறாள் .) 9
கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ? குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9
பதவுரை Show / Hide
குளிர் சோலையுள்,Kulir solaiyul - குளிர்ந்த சோலைகளிலே
தேன் அருந்தி,Then arunthi - மதுவைப் பருகி
மழலை வரி வண்டுகள்,Mazhalai vari vandugal - மழலைத் தொனியையுடைய அழகிய வண்டுகள்
குழல் என்ன யாழ் என்ன,Kuzhal enna yaazh enna - வேஸ கானமோ வீணா கானமோ என்னும்படியாக
இசை பாலும்,Isai paalum - இசைபாடப்பெற்ற
திருவல்லவாழ்,Thiruvallazh - திருவல்லவாழிலே
சுழலின் மலி சக்கரம்,Suzhalin mali sakkarum - சுறுற்சி பொருந்திய திருவாழியையுடையனான
பெருமானது,Perumaanadhu - ஸர்வேச்வரனுடைய
தொல் அருளா,Tol arula - இயற்கையான திருவருளாலே
சுழல் வனை பூரிப்ப யாம் கண்டு கை தொழ கூடும் கொல்,Suzhal vanai poorippa yaam kandu kai thozh koodum kol - சுழல் வளைகள் பூரிக்கும்படியாக நாம் கண்டு தொழநேருமோ