| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3215 | திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்பத்தும் வல்லார் சம்சாரத்திலே இருந்து வைத்தே எல்லாரிலும் சிறந்தவர் என்கிறார்.) 11 | நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல் சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ் சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11 | நாமங்கள் ஆயிரம் உடைய,Naamangal aayiram udaiya - ஸஹஸஸ்தரநாமங்களையுடையனான நம் பெருமான்,Nam perumaan - எம்பெருமானுடைய அடிமேல்,Adimel - திருவடிகளின்மேலே சேமம் கொள்,Semam kol - திண்ணிய அத்யவஸாய முடையவரான தென் குருகூர் சடகோபன்,Then kurugoor sadagopan - ஆழ்வார் தெரிந்து உரைத்த,Therindhu uraitha - ஆராய்ந்து அருளிச் செய்த நாமக்கள் ஆயிரத்துள்,Namakal aayirathul - அவனது திருநாமம் போன்றதான ஆயிரத்தினுள்ளே திருவல்லவாழ் சேமம் கொள் தென் நகர் மேல் இவை பத்தும்,Thiruvallazh semam kol then nagar mel ivai pattum - திருவல்லுலாழாகிற அரணமைந்த அழகிய திருப்பதி விஷயமான இப்பத்தையும் செப்புவார்,Seppuvaar - ஓதவல்லவர்கள் பிறந்தே,Piranthe - இவ்விருள் தருமா ஞாலத்தில் பிறந்து வைத்தே சிறந்தார்,Sirandaar - சிறந்தவராவர் |