Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3216 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3216திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (கண்ணபிரானுடைய அவதாராதிகளைக் சுருங்கவருளிச் செய்து ‘அந்தோ’! இவை என்னை மருமத்திலே நலியாகின்றனவே; தரித்து உன்னையநுஸந்திக்க முடியவில்லையே! என்று தளர்கின்றார்.) 1
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1
பிறந்த ஆறும்,Pirandha aarum - ஸம்ஸாரிகளைப்போலே தானும் வந்து பிறந்தபடியும்
வளர்ந்த ஆறும்,Valarndha aarum - தன்னை மறைத்துக்கொண்டு வளர்ந்தபடியும்
பெரிய பாரதம்,Periya Baradham - மஹாபாரத யுத்தத்தில்
கை செய்து,Kai seythu - சேனைகளை அணிவகுத்து
ஐவர்க்கு,Aivarukku - பஞ்சபாண்டவர்களுக்கு
திறங்கள் காட்டி யிட்டு,Thirangal kaatti yittu - வெற்றி வழிகளைக் காட்டிக்கொடுத்து
செய்துபோன மாயங்களும்,Seithupona maayangalum - ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து முடித்துத் தன் நாமமே சென்று சேர்ந்த மாயங்களும்
நிறந்தன் நாடு புக்கு,Niranthan naadu pukku - மருமமான ஹ்ருதய ப்ரதேசத்தினுள்ளே புகுந்து
எனது ஆவியை,Enadhu aaviyai - என் ஆத்மாவை
நின்று நின்று,Nindru nindru - இடைவிடாதே நின்று
உருக்கி உண்கின்ற,Uruki unkindra - சிதிலமாக்கி நஸியா நின்றன;
இ சிறந்தவான் சுடரே,E sirandhavaan sudare - இப்படிப்பட்ட சிறப்புப் பொருந்திய அபரிச்சேத்யதேஜோரூபனே!
உன்னை சேர்வது என்று கொள்,Unnai saervadhu endru kol - உன்னை நான் கிட்டப் பெறுவது என்றைக்கோ?