Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3221 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3221திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (நின்றது மிருந்ததும் கிடந்ததும் இன்ன இன்ன விடங்களிலே யென்று வகுத்துக் கூறாமையாலே ஆசாரியர்கள் பலபடியும் ஈடுபட்டு நிர்வஹிப்பார்கள்.) 6
நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்,Nindra aarum irundha aarum kidandha aarum - ஆங்காங்கு நிற்கிறபடிகளும் வீற்றிருக்கிற படிகளும் சயனித்திருக்கிறபடிகளும்
நினைப்பு அரியன,Ninaippu ariyan - நெஞ்சாலும் நினைக்க முடியாதவையாயிருக்கின்றன
ஒன்று அவர் உரு ஆய்,Ondru avar uru aay - (இங்ஙனே) பலபடியாய்
அரு ஆய்,Aru aay - எனக்கு அநுபவிக்கைக்கு உருத்தெரியாத
நின் மாயங்கள்,Nin maayangal - உனது அற்புதச் செயல்களை
நின்று நின்று நினைக்கின்றேன்,Nindru nindru ninaikkindrein - சிறிது சிறிதாக நினைக்கப் பார்க்கின்றேன்
உலகம் உண்ட ஒண் சுடரே,Ulagam unda on sudare - உலகங்களை அமுதுசெய்த ஒளியுவனே!
உன்னை எங்ஙனம் நினை நிற்பனந்,Unnai enganam ninaipanand - உன்னை எப்படி நினைக்கலாவேன்!
பாவியேற்கு ஒன்று உரையாய்,Paaviyera ondru uraiyaay - தரித்து நின்று நினைக்க முடியாத பாவத்தைப் பண்ணினவெனக்கு ஒரு நல்விரகு அருளிச் செய்ய வேணும்.