Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3223 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3223திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -உன்னுடைய சர்வாதிகத்வ ஸூசகமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களைக் கேட்க்கும் தோறெல்லாம் என் நெஞ்சு நெகிழ்ந்து கண்ணீர் சோரா நின்றது -நான் என் செய்வேன் -என்கிறார்.) 8
திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என் செய்கேன் அடியேனே.–5-10-8
திரு உருவு கிடந்த ஆறும்,Thiru uruvu kidantha arum - அழகிய திருமேனிகள் வளர்த்தருளின படியும்
கொப்பூழ்செம் தாமரை மேல்,Koppuzh sem thamarai mel - திருநாபிக் கமலத்திலே
திசைமுகன் கரு உன்,Disaimugan karu un - நான்மகனாகிற கருவுக்குள்ளே
வீற்றிருந்து,Veerirundhu - அந்தராத்மாவாக எழுந்தருளியிருந்து
படைத்திட்ட கருமங்களும்,Padaittidu karumangalum - ஸ்ருஷ்டித்த வியாபாரங்களுமாகிற
பொரு இல்,Poru il - எதிரில்லாத
உன் தனி நாயகம் அவை,Un thani nayagam avai - உன்னுடைய பரத்வ ப்ரகாசமான அவற்றை
கேட்கும்தோறும்,Kekkum thorum - (வேதாந்திகன் சொல்லல்) கேட்கிறபோதெல்லாம்
என் நெஞ்சம்,En nenjam - என் நெஞ்சானது
நின்று நெக்கு,Nindru nekku - கட்டுக்குலைந்து நெகிழ்ந்து நின்று
கண் நீர் அருவி சோரும்,Kan neer aruvi sorum - கண்ணீர் அருவியாகப் பெருகாகின்றது;
அடியேன் என் செய்கேன்,Adiyen en seyken - தரித்திருக்க மாட்டாத அடியேன் என்ன பண்ணுவேன்?