Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3224 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3224திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (மாவலி பக்கலிலே மாணுருவாய்ச்சென்று மூவடிநிலம் இரந்தபடியும், அந்நிலையில்நின்றே இரண்டியாலே மூவுலகையும் அகப்படுத்திக் கொண்டு நீ நினைத்த காரியத்தை முடித்துக் கொண்ட அதிசயமும் ஆகியவிவற்றைச் சொல்லக் கேட்குந்தோறும் என்னுடைய நெஞ்சு கரைந்து உருகின்றதே!; உன்னையநுஸத்தித்தால் இங்ஙனே சிதிலனாகும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் தரித்து நின்று உன்னையறுபவிப்பது என்றைக்கோ? (நொடிதல் – சொல்லுதல்.)) 9
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9
மூன்று அடியை இரந்த ஆறும்,Moonru adiyai irandha arum - (மாவலியிடத்தே) மூவடி நிலத்தை யாசித்தபடியும்
அங்கு நின்றே,Angu nindrae - யாசித்த அவ்விடத்தில் நின்று கொண்டே
ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய,Azh kadalum mannum vinnum mudiya - ஆழ்ந்தகடல்களையும் மண் விண்ணுலகங்களையுமெல்லாம்
ஈர் அடியால்,Eer adiyal - இரண்டடியாலே
முடித்துக் கொண்ட முக்கியமும் அவை,Mudithukkonda mukiyamum avai - ஆக்ரமித்துக்கொண்ட தனி வீரமுமாகிய அவற்றைக்குறித்து
நொடியும் ஆறு கேட்கும்தோறும்,Nodiyum aru kekkum thorum - (ஞானிகள்) சொல்லுகிறபடியைக் கேட்கும் போதெல்லாம்
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சு
நின் தனக்கே,Nin thanakke - உன்திறத்திலேயே
கரைந்து உகும்,Karainthu ugum - சிதிலமாகாநின்றது;
கொடிய வல்வினையேன்,Kodiya val vinaiyen - மிகக்கொடிய பாபத்தைப் பண்ணின நான்
உன்னை கூடுவது என்று கொல்,Unnai koodu vadhu endru kol - உன்னேடே கூடப்பெறுவது என்றைக்கோ?