திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3227 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3227திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் அபிநிவேசத்தைத் தெரிவியுங்கோளென்று சில குருகுகளை நோக்கி இரக்கின்றாள்) 1
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்! செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும் கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1
பதவுரை Show / Hide
வைகல்,Vaigal - எப்போதும்
பூ கழி வாய்,Poo Kazhi Vaai - அழகிய நீர்நிலத்திலே
வந்து மேயும்,Vandhu Meyum - வந்திருந்து இரையுண்கிற
குருகு இனங்காள்,Kurugu Inangkaal - கொக்கின் கூட்டங்களே!
செய் கொள் செந்நெல் உயர்,Sey Kol Sennel Uyar - கழனி நிரம்பிய செந்நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கப்பெற்ற
திரு வண் வண்டூர் உறையும்,Thiru Van Vandur Uraiyum - திருவண் வண்டூரிலே நித்யவாஸம் பண்ணா நிற்பவனும்
கை கொள் சக்கரத்து,Kai Kol Chakkarathu - திருக்கையிலே திருவாழியாழ்வானைக் கொண்டவனும்
கனி வாய்,Kani Vaai - கனிபோன்ற திருவந்ரத்தையுடையவனுமான
என் பெருமானை,En Perumaanai - எம்பெருமானை
கண்டு,Kandu - நேரில் பார்த்து
கைகள் கூப்பி,Kaigal Koopi - அஞ்ஜலி செய்து
வினையாட்டியேன் காதன்மை சொல்லீர்,Vinaiyaattiyen Kaadhanmmai Sollir - இங்ஙனே பிரிந்திருக்கும் பாவமுடையளான என்னுடைய ஆவலைச் சொல்லுங்கோள்