திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3229 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3229திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (பக்ஷிகள் கூட்டங்கூட்டமாக உலாவுவது வழக்கம். அங்ஙனே கூட்டமாக அவை இருப்பது தன் காரியம் செய்த்தற்காகவேயென்று பராங்குச நாயகியின் கருத்துப்போலும். அவை செய்களூடு உழல்வது தங்கட்கு இரை தேடுகைக்காகவாகி வாகக் கருதி, பறவைகளா! செய்களூடு எதற்காக உழல்கின்றிர்கள்? எனக்காக நீங்கள் தேடும் எம்பெருமான் திருவண்வண்டூரிலன்றோ உறைகின்றான் என்கிறாள்.) 3
திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்! சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும் கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3
பதவுரை Show / Hide
திறங்கள் ஆகி,Thirangal Aagi - திரள்திரளாக
எங்கும்,Engum - பார்த்தவிடமெல்லாம்
செய்களூடு,Seygaloodu - விளைநிலங்களிலே
உழல்,Uzhal - உலாவுகின்ற
புள் இனங்காள்,Pul Inangkaal - பறவைக் கூட்டங்களே!
சிறந்த செல்வம் மல்கு,Sirandha Selvam Malku - உயர்ந்த ஐச்வரியம் விஞ்சியிருக்கிற
திருவண்வணடூர்,Thiruvanvandur - திருவண்வண்டூரிலே
உறையும்,Uraiyum - நித்யவாஸம் பண்ணுமவனும்
கறங்கு சக்கரம் கை,Karangu Chakkaram Kai - சுழன்று வருகிற திருவாழியைக் கையிலேயுடையவனும்
கனி வாய்,Kani Vaai - கனிபோன்ற அதரத்தையுடையவனுமான
பெருமானை கண்டு,Perumaanai Kandu - எம்பெருமானை ஸேவித்து
நீர்,Neer - நீங்கள்
இறங்கி தொழுது,Irangi Thozhudhu - தாழ்ந்து தொழுது
அடியேன் இடர்,Adiyen Idar - அடியேன் படுகிற கஷ்டத்தை
பணியீர்,Paniyeer - சொல்லுங்கள்.