| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3230 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஒரு நொடிப் பொழுதும் பிரியாமே இடைவீடின்றிக் கலந்து வாழ்கின்ற அன்னப் பறவைகளை நோக்கி, திருவண்வண்டூரிலே நிரந்தரமாக நடைடிபறும் வேதவொலியைத் திருச்செவி சாத்திக்கொண்டு அ ங்கே கால் தாழ்ந்து வர்த்திக்கிற கடல்வண்ணனான பெருமானைக் கொண்டு என் பேரைச் சொல்லாதே ஒருத்தி உடல் நைந்து உருகுகின்றாளென்று சொல்லுங்கோளென்கிறாள்.) 4 | இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்? விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர் கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4 | இடல் இல்,Idal Il - பிரிந்துபடும் துக்கமில்லாத போகம் மூழ்கி,Pogam Moozhgi - இன்பத்தில் அவகாஹித்து இணைந்து ஆடும்,Inaindhu Aadum - கலந்து வாழ்கின்ற மடம் அன்னங்காள்,Madam Annangkaal - மடமைதங்கிய அன்னங்களே! விடல் இல்,Vidal Il - இடைவீடில்லாத வேதம் ஒலி முழங்கும்,Vedham Oli Muzhangum - வேதகோஷம் நிரம்பிய தண் திருவண்வண்டூர்,Than Thiruvanvandur - வேதகோஷம் நிரம்பிய குளிர்ந்த திருவண்வண்டூரிலே கடல் மேனி,Kadal Maeni - கடல்போன்ற திருமேனியையுடையவனும் பிரான்,Piran - மஹோபகாரகனும் கண்ணனை,Kannanai - ஆச்ரித ஸுலபனுமான நெடு மாலை கண்டு,Nedu Maalai Kandu - ஸர்வேச்வரனைக் கண்டு ஒருத்தி,Oruththi - ஒரு பெண்பிள்ளை உடலம் நைந்து,Udalam Nainthu - சரீரம் தளர்ந்து உருகும் என்று,Urugum Endru - உருகாநின்றாள் என்று உணர்த்துமின்,Unarththumin - அறிவியுங்கள்! |