திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3233 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3233திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நாங்கள் அவனை அறியும் படி எங்கனே என்று கேட்ட கிளிகளைக் குறித்து அவனுடைய அடையாளங்களை சொல்லி இவ்வடையாளங்களின் படியே அவனை அழகிதாகக் கண்டு எனக்காக அவனுக்கு ஒரு வார்த்தை அருவியுங்கோள் என்கிறாள்.) 7
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே! செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர் கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7
பதவுரை Show / Hide
ஒண் கிளியே,On Kiliye - அழகிய கிளியே!
செரு,Seru - ப்ரணயகலஹாஸ்
ஓண் பூ பொழில் சூழ்,On Poo Pozhil Soozh - அழகியபூஞ் சோலைகளாலே சூழப்பட்டதும்
செக்கர் வேலை,Sekkar Velai - செந்நிறமான பக்கப் பிரதேசங்களையுடையதுமான
திருவண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே
ஒரு வண்ணம் சென்று புக்கு,Oru Vannam Sendru Pukku - ஒரு விதமாகச் சென்று புகுந்து
கரு வண்ணம்,Karu Vannam - கரிய வடிவமும்
செய்ய வாய்,Seyya Vaai - சிவந்த அதரமும்
செய்ய கண்,Seyya Kan - சிவந்த திருக்கண்களும்
செய்ய கை,Seyya Kai - சிவந்த திருக்கைகளும்
செய்ய கால்,Seyya Kaal - சிவந்த திருவடிகளும்
செரு ஒண் சக்கரம் சங்கு,Seru On Chakkaram Sangu - போர்க்களத்திலே ஒண்மைபெற்று விளங்குகிற சக்கரமும் (கையை விட்டு அகலாத) சங்குமான
அடையாளம்,Adaiyaalam - லக்ஷணங்களை
திருந்த கண்டு,Thirundha Kandu - நன்றாகப் பார்த்து
எனக்கு ஒன்று உரை,Enakku Ondru Urai - எனக்காக வொரு வார்த்தைசொல்லு.