திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3235 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3235திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (சில அன்னப்பறவைகளை நோக்கி ‘திருவண்வண்டூரெம் பெருமானிடத்துச்சென்று ஏகாந்தமாக என் விஷயம் விஜ்ஞாபிக்கவேணும்‘ என்று இரக்கிறாள். ‘திருவடிகளைச் சிக்கனப் பிடித்துக் கொண்டு‘ என்று சொல்ல வேண்டிய ஸ்தானத்திலே அடிகள் கை தொழுது என்கிறாள்.) 9
அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்! விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும் கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9
பதவுரை Show / Hide
அலர் மேல் அசையும் அன்னங்காள்,Alar Mel Asaiyum Annangkaal - பூவின் மேலேயிருந்து உலாவுகின்ற அன்னங்களே!
விடிவை,Vidivai - ஸுப்ரபாதகாலத்திலே
சங்கு ஒலிக்கும்,Sangu Olikkum - சங்கு முழங்கப்பெற்ற
திரு வண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே
உறையும்,Uraiyum - எப்போதும் வாழ்கின்ற
கடிய மாயன் தன்னை,Kadiya Maayan Thannai - கடுமையான மாயச் செயல்களையுடையனாய் அடியார்களுக்கு விதேயனாய்
நெடு மாலை,Nedu Maalai - அடியார்பக்கலிலே மிகவும் வியாமோஹ முடையவனாயிருக்கிற எம்பெருமானை
கண்டு,Kandu - சேவித்து
அடிகள் கை தொழுது,Adigal Kai Thozhudhu - திருவடிவாரத்திலே அஞ்ஜலிபண்ணி
கொடிய வல் வினையேன் திறம்,Kodiya Val Vinaiyen Thiram - மிகக்கொடிய பாபத்தையுடையேனான என் விஷயமாக
வேறு கொண்டு,Veru Kondu - ஏகாந்தமாக
கூறுமின்,Koorumin - புருஷகாரமான வார்த்தைகளைச் சொல்லுங்கள்