| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3237 | திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுக்கும் அவனடியார்கட்கும். விரும்பத் தக்கவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது.) 11 | மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11 | மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்,Min Kol Ser Purinool Kural Aai - ஒளியையுடைத்தாய், திருமேனிக்குச் சேர்ந்த்தான் யஜ்ஞோபவீதமணிந்த வாமனமூர்த்தியாகி அகல் ஞாலம் கொண்ட,Agal Gnalam Konda - விசாலமான பூமி முழுவதையும் அளந்து கொண்ட வன் கள்வன்,Van Kalvan - மஹாவஞ்சகனான எம்பெருமானுடைய அடிமேல்,Adimel - திருவடிகள் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன,Kurukoor Sadagopan Sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த பண் கொள் ஆயிரத்துள்,Pan Kol Aayirathul - பண்மிகுந்த ஆயிரத்தினுள்ளே திருவண்வண்டூர்க்கு,Thiru Vanvandurukku - திருவண்வண்டூர் விஷயமான இன் கொள் பாடல்,In Kol Paadal - பரமபோக்யமான பாடலான இவை பத்தும்,Ivai Pathum - இப்பத்துப்பாசுரங்களையும் வல்லார்,Vallar - ஓதவல்லவர்கள் மின் இடையவர்க்கு மதனர்,Min Idaiyavarkku Madhanar - காமினிகளுக்குக் காமுகர்போல் எம்பெருமானுக்கு ஸ்ப்ருஹணீயராவர்கள் |