திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3240 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3240திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின். – “உன்னுடைய திருக் கண்களினுடையவும் திருப் பவளத்தினுடையவும் அழகு இருந்தபடி என்!, கண்டும் கேட்டுமறியாத்தொருபடியான இவ்வழகு திருப்பாற்கடலிலே அம்ருத மதந ஸமயத்திலே அவதிர்ணையான பெரிய பிராட்டியோடு அன்று கலந்த கல்வியாலும் பிறந்ததில்லை, இப்படி பெரிய பிராட்டியிற்காட்டிலும் உனக்கு அபிமதைகளாய் உன்னை புஜிக்கப் பிறந்தவர்கள் ஆரோ வென்கிறாள்“ என்று.) 3
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்; வேயிருந் தடந் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல், மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3
பதவுரை Show / Hide
நம்பி,Nambi - பிரானே!
போய் இருந்து,Poy Irundhu - எங்களைவிட்டு அப்பால் போயிருந்து
நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை,Nin Pulluvam Ariyadhaarkku Urai - உனது வஞ்சகங்களை அறியாதவர்களான சிலர் பக்கலிலே உன் மெய்போலும் பொய்களைச் சொல்லிக்கொண்டிரு
நின் செய்ய வாய் இரு கனியும்,Nin Seyya Vai Iru Kaniyum - உனது சிவந்த அதரமாகிற சிறந்த கனிபும்
கண்களும்,Kangalum - திருக்கண்களும்
இந்நாள் விபரீதம்,Innal Vibareedham - இப்போது முன்போல் அல்லகிடாய் (இதற்குமேல் முகத்தை மாற வைத்துக்கொண்டு சொல்லுகிறார்கள்)
மா இரு கடலை கடைந்த பெருமானாலே,Maa Iru Kadalai Kadaintha Perumanaale - அகாதமாய் விசாலமான கடலைக் கடைந்தவனான இப்பெரியோன் பக்கலிலே
இத்திரு அருள் பெறுவார்,Ithiru Arul Peruvaar - இப்படிப்பட்ட திருவருளைப் பெறுமவர்களான
வேய் இரு தட தோளினார்,Vey Iru Tada Tholinaar - வேய்போன்று பருத்து நெடிய தோள்படைத்தவர்கள்
யவர் கொல்,Yavar Kol - யாவரோ