திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3241 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3241திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -அரை க்ஷணம் தாழ்த்தோம் என்னா-அசங்கத பாஷணங்களை சொல்லுகிறது என் -நான் பரதந்த்ரன் அல்லனோ -மாதா பிதாக்கள் போய் பசுக்களை மேய் என்று நியமித்தால் உங்கள் பக்கல் வரப்போமோ -இது ஒழிய வேறு ஒரு விளம்ப ஹேது இல்லை என்ன -அக்கடிதங்களை கடிப்பிக்கை நீ வல்லது ஓன்று அன்றோ -என்கிறாள்.) 4
ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே? வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4
பதவுரை Show / Hide
ஏழ் உலகும் உண்டு,Ezh Ulagum Undu - ஸமஸ்த லோகங்களையும் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து
ஆலின் நீள் இலை,Aalin Neel ilai - ஆலமரத்தின் இளந்தளிரிலே
அன்று நீ கிடந்தாய்,Andru Nee Kidandhaay - முன்னொருகாலத்தில் கிடந்தவனல்லையோ நீ
உன் மாயங்கள்,Un Maayangal - உனது மாயச்செயல்களை
மேலே வானவரும் அறியார்,Mele Vaanavarum Ariyaar - மேற்பட்டவர்களான நித்யஸூரிகளும் அறியார்கள்,
இனி எம் பரமே,Ini Em Parame - அப்படியிருக்க எம்மால் அறியப்போமோ,
வேலின் நேர் தட கண்ணினார்,Velin Ner thada Kanninaar - வேல்போன்று பெரிய கண்களை யுடையவர்களான மாதர்கள்
விளையாடு,Vilaiyaadu - விளையாடுமிடமான
சூழலை,Soozhalai - விலாஸ ஸ்தானங்களை
சூழவே நின்று,Soozhave Nindru - பற்றிக்கொண்டிருந்து
காலி மேய்க்க வல்லாய்,Kaali Meikka Vallai - பசுக்களைமேய்க்கவல்ல பெருமானே!
எம்மை நீ சுழறேல்,Emmay Nee Suzharel - இந்தப் பொய்கள் எங்களுக்குச் சொல்லவேண்டா.