| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3244 | திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள்.) 7 | கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே; வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார் தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7 | கடல் ஞாலம் உண்டிட்ட,Kadal Gnalam Undittu - கடல் சூழ்ந்த வுலகங்களையெல்லாம் ஒருகால் திருவயிற்றினுட்கொண்ட நின்மலா,Ninmala - விமலனே! நெடியாய்,Nediyaai - பெரியோனே! எங்கள் கையில் பாவை பறிப்பது,Engal Kaiyil Paavai Parippadhu - எங்கள் கையிலுள்ள லீ லோபகரணங்களை லியப்பிடித்திழுப்பதானது கன்மம் அன்று,Kanmam Andru - செய்யத்தகுந்த காரியமன்று உனக்கேலும் பிழை பிழையே,Unakkellum Pizhai Pizhaiye - இது உனக்கு மிகப்பெரிய அவத்யமேயாகும் (இதுவன்றியும்) எம்மை,Emmay - எங்களை நோக்கி வன்ம்மே சொல்லி,Vanmme Solli - மருமமான வார்த்தைகளைச் சொல்லி விளையாடுதி,Vilaiyaaduthi - விளையாடுகின்றாய் என் ஐம்மார்,En Aimmaar - எங்களுடைய ஸஹோதரர்கள் அது கேட்டில்,Adhu Keettil - இப்படியெல்லாம் நீ செய்தும் சொல்லியும் போருகிறயென்பதைக் கேட்கப்பெற்றார்களாகில் தன்மம் பாவம் என்னார்,Tanmam Paavam Ennar - நன்மை தீமை யென்று கூடப் பாரார்கள் ஒரு நான்று தடி பிணக்கே,Oru Naandru Tadi Pinakke - ஒரு கால் உன்னைத் தடியிட்டுத் தகர்க்கும்படியாகவும் நேர்ந்துவிடும். |