| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3246 | திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) ̐(ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இவன் தகைந்தவாறே கடக்கப் போய்ச் சிற்றில் இழைக்க -நம்மை அநு வர்த்தித்துப் போகாதே அநாதரித்தார்கள் என்கிற சீற்றத்தால் சிற்றிலை அழிக்க நாங்கள் உன் முக சோபையைப் பார்த்திருந்து சிற்றில் இழையாதபடி இத்தை அழித்தாயே என்று இன்னாதாகிறாள்.) 9 | உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்; தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9 | உகவையால்,Uvavaiyal - அந்தரங்கப்ரீதியாலே நெஞ்சம் உள் உருகி,Nenjam ul urugi - நெஞ்சு உள்ளேயுருகி உன் தாமரை தடம் கண்விழிகளின் வலை அகப்படுப்பான்,Un tamarai tadam kanvizhikalin valai agapaduppan - உன்னுடைய தடந்தாமரைக் கண்ணோக்கமாகிற வலினுள்ளே நாங்கள் அகப்படும்படி பண்ணுவதற்காக உன் திருஅடி யால்அழித்தாய்,Un tiruadi yalazhithai - உன் திருவடியாலுதைத்து நொறுக்கித் தள்ளினாய் எங்கள் சிற்றிலும்,Engal siRrilum - நாங்கள் இழைக்கின்ற சிற்றிலையும் யாம் அடு சிறு சோலும் கண்டு,Yam adu siRu solum kandu - நாங்கள் சமைக்கிற சிறு சோற்றையுங்கண்டு நின் முகம் ஒளி திகழ,Nin mugam oli thigazha - உன்னுடைய திருமுகமண்டலம் நன்கு பிரகாசிக்கும்படியாக முறுவல் செய்து நின்றிலே,MuRuval seythu nindrile - சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்த வேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் திருவடியாலும் அழித்தாய். தகவு செய்திலே,Thagavu seythile - இரக்கமான காரியம் செய்தாயல்லை |