| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3252 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் கீழ்ச் சொன்ன புகர் கொள் கீர்த்தியானது புண்ய பாப அநு பந்தி பதார்த்த விபூதிகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிர்ஹேதுக கிருபை என்கிறார்) 4 | புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய் எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4 | புண்ணியம்,punniyam - புண்ணியமும் பாவம்,paavam - பாபமுமாய் புணர்ச்சி,punarcci - சேர்க்கையும் பிரிவு என்று இவை ஆய்,pirivu enru ivai aai - பிரிவுமாய் எண்ணம் ஆய்,ennam aai - நினைவும் மறப்புஆய்,marappu aai - மறதியுமாய் உண்மை ஆய்,unmai aai - உண்மைப் பொருளும் இன்மைஆய்,inmai aai - பொருள் இல்லாமையுமாய் அல்லன் ஆய்,allan aai - பாப புண்யங்களை நியமிப்பவனாய் திண்ண,thinna - உறுதியான மாடங்கள் சூழ்,maadangal soozh - மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகர்,tiruvinnagar - திருவிண்ணகரை சேர்ந்த பிரான்,serndha piraan - சேர்ந்த ஸ்வாமியான கண்ணன்,kannan - கண்ணனின் இன் அருளே,in arule - இனிய அருளே கைதவமே,kaithavame - உய்வதற்கு வழி என்று கண்டு கொண்மின்கள்,kandu konminkal - கண்டு கொள்ளுங்கள் |