திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3253 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3253திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (சிறியார் பெரியார் என்கிற வாசின்றிக்கே அனைவர்க்கும் காவலோன் திருவிண்ணகரப்ப னென்கிறார்) 5
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய் மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச் செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5
பதவுரை Show / Hide
கைதவம் செம்மை,Kaithavam semmai - கோணலும் நேர்மையுமாய்
கருமை வெளுமையும் ஆய்,Karumai veLmaiyum aai - கறுப்பும் வெளுப்புமாய்
மெய் பொய்,Mey poi - மெய்யும் பொய்யுமாய்
இளமை முதுமை,iLamai mudhumai - யௌவனமும் கிழத்தனமுமாய்
புதுமை பழமையும் ஆய்,Puthumai pazhamaiyum aai - நவீநத்வமும் ஜீர்ணத்தவமுமாய்க்கொண்டு
செய்த திண் மதின் சூழ்,Seydha thiN madhin soozh - வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட திடமான மதிளாலே சூழப்பட்ட
திருவிண்ணகர்,TiruviNNagar - திருவிண்ணகரிலே
சேர்ந்த பிரான்,Serndha piraan - வர்த்திக்கிற ஸர்வேச்வரன்
பெய்த காவு கண்டீர்,Peydha kaavu kandeer - ஆக்கின சோலையன்றோ
பெரும் தேவு உடை மூ உலகு,Perum dhevu udai mu ulagu - பிரமன் முதலான உத்க்ருஷ்ட தேவதைகளை யுடைத்தான மூவுலகமும்.