| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3255 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்) 7 | பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர் சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7 | பரம் சுடர் உடம்பு ஆய்,Param sudar udambu aai - அப்ராக்ருத விக்ரஹயுக்தனாயும் அழுக்கு பதித்த உடம்பு ஆய்,Azhukku pathitha udambu aai - ஹேய ஜகத்ரூப சரீரயுக்தனாயும் கரந்தும் தோன்றியும் நின்றும்,Karandhum thondriyum nindrum - மறைந்தும் வெளிப்பட்டு மிருந்தும் கைதவங்கள் செய்தும்,Kaithavangal seythum - வஞ்சனைகளைச் செய்தும் (இப்படிப்பட்ட தன்மைகள் திகழ) விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்,ViNNor sirangalal vaNangum tiru viNNagar serndha piraan - தேவர்கள் தலைவணங்கித் தொழுமிடமான திருவிண்ணகரிலே உறையும் பெருமாடைய வரம் கொள் பாதம் அல்லால்,Varam koL paadham allaal - சிறப்புப் பொருந்திய திருவடிகள் தவிர யாவர்க்கும் வன் சரண் இல்லை,Yaavarkkum van saran illai - யார்க்கும் வலிதான புகலிடம் வேறில்லை. |