| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3257 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என்னுடைய சிரமம் எல்லாம் தீரும்படி-தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்.) 9 | என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய் மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன் தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9 | எனக்கு என் அப்பன் ஆய் இகுள் ஆய் என்னை பெற்றவள் ஆய்,Enakku en appan aai igul aai ennai petRavaL aai - எனக்குத் தந்தையாயும் செவிலித்யாயும் பெற்றதாயாயும் பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனும் ஆய்,Pon appan maNi appan muthu appan en appanum aai - பொன் மணி முத்து இவற்றின் தன்மைபோன்ற தன்மையை யுடையனுயும்மஹோபகாரகனாயுமிருந்துகொண்டு மின்ன பொன் மதின் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த அப்பன்,Minna pon madhin soozh tiru viNNagar serndha appan - ஒளிவிடும்படி பொன்மயமான மதிளாலே சூழப்பட்ட திருவண்ணகரிலே தங்கும் ஸ்வாமி யானவன் தன் ஒப்பார் இல் அப்பன்,Than oppaar il appan - தன்னோடொத்தார் இல்லாத மஹான்! தன தான் நிழல் தந்தனன்,Thana thaan nizhal thanthanan - (எனக்குத்) தனது திருவடிநிழலைக் கொடுத்தருளினன். |