| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3258 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -இப்படி பரஸ்பர விருத்த ஆகாரமான சகல சராசரங்களையும் விபூதியாகயுடைய சர்வேஸ்வரன் திருவடிகள் அல்லது வேறு ரக்ஷகமுடையோம் அல்லோம் -இத்தை நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்று உபதேசித்து முடிக்கிறார்.) 10 | நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச் சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10 | நிழல் வெய்யில்,Nizhal veyyil - நிழலாயும் வெய்யிலாயும் சிறுமை பெருமை,Sirumai perumai - அணுத்வமாயும் விபுத்வமாயும் குறுமை நெடுமையும் ஆய்,Kurumai netumaiyum aai - ஹ்ரஸ்வத்வமாயும் தீர்க்கத்வமாயும் சுழல்வன நிற்பன மற்றும் ஆய,Suzhalvan nirpanum aai - ஜங்கமங்களாயும் ஸ்தாவரங்களாயும் மற்றுமுள்ள பதார்த்தங்களாயும் அவை அல்லனும் ஆய்,Avai allanum aai - அவற்றினுடைய ஸ்வபாவத்தையுடையனல் லாதவனாயும் இருந்து கொண்டு மழலை வாய் வண்டு வாழ் திரு வண்ணகர் மன்னுபிரான்,Mazhalai vaay vandu vaazh tiru vannagar mannupiran - மழலைப்பேச்சை யுடையவண்டுகள் களித்துவர்த்திக்கிற திருவிண்ணகரிலே நித்யவாஸம் பண்ணுகிற எம்பெருமானுடைய கழல்கள் அன்றி,Kazhalkal andri - திருவடிகள்தவிர மற்று ஓர் களைகண் இலம்,Matru or kalaign ilam - வேறொரு ரக்ஷகவஸ்துவை யுடையோமல்லோம் காண்மின்கள்,Kanminkal - இதை ஸத்யமென்று கொள்ளுங்கள் |