| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3259 | திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (இத் திருவாய்மொழியை அதிகரிக்க வல்லவர்கள் நித்ய ஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11 | காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார் கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11 | உலகீர்,ulagir - உலகத்திலுள்வர்களே! கரண்மின்கள் என்று,karanminkal enru - இந்த விநோதத்தைக் காணுங்கோள் என்று (சொல்பவன் போன்று) கண் முகப்பே நிமிர்ந்த,kan mukappe nimirnda - கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த தான் இணையன் தன்னை,thaan inaiyan thannai - உபயபாதங்களை யுடையவனான எம்பெருமான் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன,kurukoor sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த ஆணை ஆயிரத்து,aanai aayirathu - பகவதாஜ்ஞா ரூபமான ஆயிரத்தினுள்ளும் திருவிண்ணகர் பத்தும் வல்லார்,tiruvinnagar paththum vallaar - திருவிண்ணகர் விஷயமான இப்பதிகத்தை ஓத வல்லவர்கள் விண்ணோர்க்கு,vinnorkku - நிர்யஸூரிகளுக்கு கோணை இன்றி ,konai indri - மிறுக்கு இல்லாமல் என்றும் குரவர்கள் ஆவர்,endrum kuravargal aavar - எப்போதும் கௌரவிக்கத்தகுந்தவராவர்கள். |