| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3261 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஆச்சர்யமான ஆகாரத்தை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நினைத்தார் நெஞ்சை நெகிழப் பண்ணும் சேஷ்டிதங்களை ச ஸ்நேஹ அநு சந்தானம் பண்ணிக் காலம் எல்லாம் போகா நின்றது – நித்ய அனுபவம் பண்ணுகிற விலக்ஷண தேசம் எனக்கு சத்ருசமோ -என்கிறார்) 2 | கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2 | கேயம் தீம் குழல் ஊதிற்றும்,Keyam theem kuzhal oothiththum - சிறந்த கானமாக மதுரமான ய்ங்குழலை ஊதினதென்ன. நிரை மேய்த்ததும்,Nirai meiththathum - பசுக்கூட்டங்க மேய்த்ததென்ன கெண்டை ஒண்கண் வாசம் பூ குழல் பின்னை தோள்கள் மணந்ததும்,Kendaionkan vaasam poo kuzhal pinnai tholkaL mananthathum - கென்னட மின்போன்று அழகிய கண்களையும் நறுமணம்மிக்க பூக்களணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னையின் தோள்களோடே அணையப்பெற்றதென்ன இவையும் மற்றும் பல,Matrum pala - மற்றும் பலவுமான மாயம் கோலம் பிரான்தன் செய்கை,Maayam kolam piraanthan seikai - திவ்யமங்கள விக்ரஹசாலியான கண்ணபிரானுடைய சேஷ்டிதங்களை நினைத்து,Ninaiththu - சிந்த்னைசெய்து மனம் குழைந்து,Manam kuzhaindhu - நெஞ்சு நீர்ப்பண்டமாக கேயத்தோடு எனக்கு கழிந்த போது,Keyaththodu enakku kazhintha podhu - அன்போடு எனக்குக் கழிகின்ற காலத்தின் எவ்வுலகம் நிகர்,Evvulagam nigar - உபயவிபூதியும் ஒவ்வாது. |