| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3263 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (இங்கே நம்பிள்ளை யீடு – “ஜீயர் இப்பாட்டை இயலருளிச்செய்யப் புக்கால் நோவ என்றருளிச் செய்யுமழகு காணும். நோவ வென்கிறார் காணும் ஆழ்வார் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே! யசோதைப்பிராட்டியானவள் கண்ணனை உரலோடே கட்டிவைக்க அப்போது ஏங்கி யிருந்தபடியைச் சொல்லுகிறது.) 4 | நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச் சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும் தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4 | ஆய்ச்சி நோவ,Aichchi nova - யசோதைப்பிராட்டியானவள் திருமேனியில் நோவுண்டாகும்படி (அல்லது, பக்தர்களின் மனம் துடிக்கும்படி) உரலோடு ஆர்க்க,Uralodu aarka - உரலோடு சேர்த்துப் பிணைக்க வஞ்சம் பெண்ணை சாவ,Vancham pennai sava - வஞ்சனைசெய்யவந்த பூதனை முடியும்படியென்ன பால் உண்டதும்,Paal undathum - அவளது முலைப்பாலை உண்டதென்ன ஊர் சகடம் இறசாடியதும்,Oor sakadam irasaadiyathum - (அஸுராவேசத்தாலே) ஊர்ந்துவந்த சகடம் பொடிபடும்படி தகர்த்ததென்ன (ஆக இப்படிப்பட்ட) தேவக் கோலம் பிரான் தன் செய்கை,Devak kolam piraan than seikai - அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹனான கண்ணபிரானுடைய செயல்களை நினைந்து,Ninainthu - அநுசந்தித்து மனம் குழைந்து,Manam kuzhaindhu - நெஞ்சு நெகிழ்ந்து மேவ,Meva - பொருந்தும்படி காலங்கள் கூடினேன்,Kaalangal koodinean - காலங்கள் பலிக்கப்பெற்றேன் எனக்கு என் இனி வேண்டுவதே?,Enakku en ini venduvathae? - இங்ஙகனே பாக்கியம் பெற்ற எனக்கு இனிவேண்டுவது என் (இனிப்பெறவேண்டுவதொன்றுண்டோ?) |