Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3264 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3264திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவவதாரம் பண்ணி அருளினை பின்பு -கம்சன் அறியாத படி வளர்ந்து கம்சனை மாய்த்த படி -இன்று இருந்து அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு மிடி இல்லை என்கிறார் -எதிர் உண்டோ என்றுமாம்) 5
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5
தேவர் இரக்க,Devar irakka - தேவதைகள் பிரார்த்திக்க
வேண்டி,Vendi - திருவுள்ளமுவந்து
வந்து பிறந்ததும்,Vanthu pirandathum - நிலவுலகத்தில் வந்து அவதரித்ததென்ன
அன்று,Andru - அப்போதே
அன்னை,Annai - பெற்றதாயான தேவகி
பூண்டு,Poondhu - (கஞ்சன்பக்கல் பயத்தினால்) எடுத்தணைத்துக் கொண்டு
புலம்ப,Pulamba - இங்கேயிருந்தால் என்ன அபாயம் விளையுமோவென்று கதறி யழுதவளவிலே
ஓர் ஆய் குலம் புக்கலும்,Or aai kulam pukalum - இடைச்சேரியிலே பிரவேசித்ததென்ன
காண்டல் இன்றி வளர்ந்து,Kaandal indri valarnthu - விரோதிகளுக்குக் காணுதலில்லாதபடி மறைவாக வளர்ந்து
கஞ்சனை துஞ்சவஞ்சம் செய்ததும்,Kanchanai thunja vanjam seidathum - கம்ஸன் முடியும்படியாக அவன் திறத்திலே வஞ்சனைசெய்த்தென்ன ஆகிய இச்செயல்களை
ஈண்டு,Indu - இப்போது (அல்லது) இவ்விடத்தே
நான் அலற்ற பெற்றேன்,Naan alatra petren - நான் வாய்விட்டு உத்கோஷிக்கப்பெற்றேன்,
எனக்கு என்ன இகல் உளது,Enakku enna ikal ulathu - இனி எனக்கு என்ன குறையுண்டு?