| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3265 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கிருஷ்ணனுடைய பிரதிகூல நிரசன பரம்பரையை அனுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மநோதுக்கம் இல்லை என்கிறார்.) 6 | இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும் உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6 | இகல் கொள் புள்ளை பிளந்ததும்,Igal kol pullai pilandathum - விரோதபுத்தியுடன் வந்த பகாசுரனை வாய்பிறந்து முடித்ததென்ன இமில் ஏறுக்ள் செற்றதுவும்,Imil erukal setrathuvum - பிசலையுடைய எருதுகளை (நப்பின்னைக்காகக்) கொன்றதென்ன உயர் கொள் சோலைகுருத்து ஒசித்ததும்,Uyar kol solaikuruthu osithathum - உயர்ச்சியைக் கொண்ட சோலையிலுள்ள குருந்த மரத்தை முறித்ததென்ன உட்பட மற்றும்,Utpad matrum - இவை முதலாக மற்றும் பலவான அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே,Akal kol vaiyam alandha maayan en appan than maayangale - பூமிப்பரப்பை யெல்லாம் அளந்துகொண்ட மாயனான எம்பெருமானுடைய அற்புதச் செயல்களையே பகல் இரா பரவ பெற்றேன்,Pagal ira parava petren - பகலும் இரவும் துதிக்கப்பெற்றேன் எனக்கு என்ன மனம் பரிப்பு,Enakku enna manam parippu - இன எனக்கென்ன மனத்துயரமுளது |