| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3266 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (அரக்கரசுரர் போல்வாரான விரோதிகள் பக்தவர்க்கங்களை நலியுமது பொறுக்கமாட்டாமே அழுக்கு மானிடசாதியில் வந்து பிறந்து அவர்களை அழியச் செய்யும் சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு இந்நிலத்தில் நிகராவார் யாருமில்லை யென்கிறார்) 7 | மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும் புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7 | தான்,Thaan - பரஞ்சோதியுருவனானதான் அழுக்கு மானிடசாதியில்,Azhukku maanidasadhiyil - ஹேயமான மநுஷ்யஜாதியிலே மனப் பரிப்போடு பிறந்து,Manap parippodu pirandhu - ஸம்ஸாரிகள் விஷயமாகத் திருவுள்ளத்தில் தளர்த்தியோடே வந்து பிறந்து தனக்கு வேண்டு உரு கொண்டு,Thanakku vendu uru kondu - தனக்கு இஷ்டமான விக்ரஹங்களைப் பரிக்கரஹித்து தான் தன சீற்றத்தினை முடிக்கும்,Thaan thana seetrathinai mudikkum - தன்னுடைய சீற்றத்தைத் தவிர்த்துக்கொள்ளுமவனான புனம் சூழாய் மாலை முடி மார்பன் என் அப்பன் தன் மாயங்களே,Punam sool aai maalai mudi maarban en appan than maayangale - செவ்வித்துழாய் மாலையைத் திருமுடியிலும் திருமார்பிலுமுடையனான எம்பெருமானது ஆச்சரிய சேஷ்டிதங்களையே நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு,Ninaikkum nenju udaiyen enakku - அநுஸந்திக்கும் நெஞ்சு படைத்த வெனக்கு இனி நின் நிலத்து நிகர் ஆர்,Ini nin nilathu nigar aar - இனி இப்பெருநிலத்தில் ஒப்பாவார் ஆர்? (ஆருமில்லை.) |