| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3267 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –வாண விஷய பிரமுகமான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் மற்றும் ஸ்ரீ வாமனனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் நெஞ்சுடையேனான எனக்கு இனி கலக்கமுண்டோ -என்கிறார்) 8 | நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8 | நீள் நிலத்தொடுவான் வியப்ப,Neel nilathoduvaan viyappa - மண்ணோரும் விண்ணோரும் ஆச்சரியப்படும் படியாக நிறைபெறும் போர்கள் செய்து,Niraiperum porkal seithu - நிறைந்த மஹாயுத்தங்களைப்பண்ணி வாணன் ஆயிரம் தோள் துணிந்ததும் உட்பட மற்றும் பல,Vaanan aayiram thol thunindhathum utpad matrum pala - பாணாசுரனுடைய ஆயிரந்தோள்களைத் துணிந்தது முதலாக மற்றும் பலவான மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே,Maani aai nilam konda maayan en appan than maayangale - பிரமசாரியாய்ப் பூமியை நீரேற்றுப்பெற்ற மாயனான எம்பெருமானது அற்புதச் செயல்களையே காணும் நெஞ்சு உடையேன் எனக்கு,Kaanum nenju udaiyen enakku - ஸாக்ஷாத்கரிக்கவல்ல நெஞ்சுபடைத்த வெனக்கு இனி என்ன கலக்கம் உண்டே,Ini enna kalakkam unde - இனி ஒருவகையான கலக்கமுமில்லை. |