திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3269 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சம்சாரத்தின் உள்ளே வந்து திருவவதாரம் பண்ணி யருளி நிரபாயமான திரு நாட்டிலே போய்ப் புக்க படியை அனுபவிக்கப் பெற்ற வேறு சிலர் நிர்வாஹர் வேண்டும்படி குறையுடையேன் அல்லேன்-என்கிறார்) 10 | மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10 | பதவுரை Show / Hideமண் மிசை பெருபாரம் நீங்க,Mann misai perubaaram neenga - பூமியின்மேலிருந்த பெருஞ்சுமை தொலையும் படியாக ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி ,OrBharatha maa perum por panni - மஹாபாரத யுத்தத்தை யுண்டாக்கி மாயங்கள் செய்து,Maayangal seidhu - ஆச்சரியச் செயல்களைச் செய்து சேனையை பாழ்பட நூற்றிட்டு,Senaiyai paalpada noottrittu - எல்லாச்சேனையும் பாழ்படும்படி ஸங்கல்பித்து முடித்து போய்,Poi - இவ்விடம்பிட்டுப் புற பிட்டு விண் மிசை தன தாமமே புக மேவிய,Vin misai than thaamame puga meviya - பரமாகரசத்திலே தன்னுடைய ஸ்தான விசேஷத்திலே சென்று பொருந்தின. சோதி தன் தாள்,Sothi than thaal - பரஞ்சோதிப்பெருமானுடைய திருவடிகளை நான் நண்ணி வணங்கப்பெற்றேன்,Naan nanni vanangappetren - நான் கிட்டி வணங்கப் பெற்றேன். எனக்கு பிறர் நாயகர் ஆர்,Enakku pirar naayakar aar - எனக்கு வேறு நியாமகர் ஆர் (ஆருமில்லை) |