| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3270 | திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் கிருஷ்ண சேஷ்டிதங்களை பேசின இப்பத்தும் கற்றார் ஆழ்வார் தம்மைப் போலே கிருஷ்ணனுக்கே பக்தராவார் என்கிறார்.) 11 | நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன் வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம் கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11 | முழு ஏழ் உலகுக்கும் நாயகன் அய்,Muzhu ez ulagukkum naayagan ai - எல்லா வுலகங்களுக்கும் நிர்வாஹகனாகி முழு ஏழ் உலகும் தன் வாயகம் புகவைத்து உமிழ்ந்து,Muzhu ez ulagukkum than vaayagam pugavaithu umizhndhu - அந்த ஸகல்லோகங்களையும் (ப்ரளயம்கொள்ளாதபடி) தன் வாய்க்குள்ளே புகவிட்டுப் பிறகு வெளிப்படுத்தி. அவை ஆய்,Avai ai - அவை தானேயாய் அவை அல்லனும்,Avai allanum - அவற்றின் படியே யுடையனல்லாதவனுமான கேசவன்,Kesavan - எம்பெருமானுடை அடி இணை மிசை,Adi inai misai - உபயபாதங்கள் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன,Kurugoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச்செய்த தூய ஆயிரத்து,Thooya aayiraththu - பரிசுத்தமான ஆயிரத்துள்ளே துவள் இன்றி பக்தர் ஆவர்,Thuval indri bakthar aavar - அநந்யப்ரயோஜந பக்தி மான்களாகப் பெறுவர்கள். |