| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3271 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-5-1- திருத் தாய்மாரைக் குறித்து இவளுடைய தோழியானவள் இவள் பிரகிருதி அறிந்து வைத்து இவளுக்கு திருத் தொலை வில்லி மங்கலத்தை காட்டின நீங்கள் ஹித உபதேசம் பண்ணினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறாள்.) 1 | துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ; தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும் குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! துவள் இல் மா மணி மாடம் ஓங்கு,Thuval il maa mani maadam oongu - குற்றமற்றச் சிறந்த ரத்நங்களையுடைய மாடங்கள் விளங்கப்பெற்ற தொலைவில்லி மங்கலம்,Tholaivilli mangalam - துலைவில்லிமங்கல மென்கிற இரட்டைத்திரப்பதியை தொழும் இவளை,Thozhum ivalai - தொழாநின்ற இப்பராங்குசநாயகியை நீர் இனி விடுமின்,Neer ini vidumin - நீங்கள் இனி உபேக்ஷித்துவிடுங்கள், உமக்கு ஆசையில்லை,Umakku aasai illai - (இவள் திறந்து) நீங்கள் ஆசைவைக்க இடமில்லை, (இவனுடைய நிலைமையைச்சொல்லுகிறேன் கேளுங்கள்) தவளம் ஒண் சங்கு சக்கரம் என்றும்,Thavalam on sangu sakkaram endrum - வெண்ணிறமாய் அழகியதான சங்கையும் சக்கரத்தையும் சொல்லுகின்றவளாயும் தாமரை தடம் கண் என்றும்,Thamarai thadam kan endrum - தாமரைபோன்று விசாலமான திருக்கண்களைச் சொல்லுகின்றவளாயும் இருந்துகொண்டு ஓண் குவளை மலர் கண்கள் நீர் மல்க,On kuvazhai malar kangaL neer malga - அழகிய குவளப் பூப்போன்ற கண்கள் நீர் பெருக நின்று நின்று குமிறும்,Ninru ninru kumirum - ஒன்றும் வாய்விட்டுச் சொல்லமாட்டாமல்லன்று நின்று குமிறுகின்றாளிவன். |