திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3272 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3272திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் நித்ய ஸூரி களுக்கு அநு பாவ்யமான தேவ பிரான் எழுந்து அருளி இருக்கிற திருத் தொலை வில்லி மங்கலத்திலே மஹோத்சவத்திலே கொண்டு புக்கு இவளை அகலும்படி பண்ணி கோள்-என்கிறாள்.) 2
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர் திமிர் கொடாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2
பதவுரை Show / Hide
(அன்னைமீர்),(Annaimeer) - தாய்மார்களே!
குமிறும் ஓசை விழவு ஒலி,Kumirum osai vizhavu oli - ஆராவாரிக்கின்ற ஓசையையுடைய உத்ஸவ கோலாஹலங்களையுடைத்தான
துலைவில்லிமங்கலம்,Tholaivillimangalam - இரட்டைத்திருப்பதியிலே
அமுதம் மெல்மொழியவளை,Amudham melmozhiyavalai - அமுதம்போன்று மதுரமானமெல்லிய வாய்மொழிகளை யுடையவளான இப்பெண் பிள்ளையை
நீர் கொண்டு புக்கு,Neer kondu pukku - நீங்கள் அழைத்துக்கொண்டுபோய்
உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,Umakku aasai indri akatrineer - மறுபடியும் நீங்கள் இவளோடு உறவுபண்ணுகைக்கு ஆசையில்லாதபடி உறவறுத்துக்கொண்டீர்கள்.(அது எங்ஙனே தெரிகிறதென்றால்)
இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்,Thimir kondal oththu nirkum - திமில் கொண்டாற்போலே பேசாதே நிற்கின்றாள்,
மற்று,Matru - அதுவுமல்லாமல்
தேவதேவபிரான் என்றே,Devadevapiran endrae - எம்பெருமானது திருநாமத்தைச் சொன்னமாத்திரத்திலே
நிமியும் வாயொடு,Nimiyum vaayodu - நெறிந்தவாயோடுகூடி
கண்கள் நீர் மல்க,Kangal neer malga - கண்கள் நீர்பெருகப் பெற்று
நெக்கு ஒசித்து கரையும்,Nekku osithu karaikum - கட்டுக்குலைந்து தளர்ந்து உருகுநினறாள்.