திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3273 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3273திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (இப் பெண் பிள்ளையைத் துலைவில்லித் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவர்கள் அவ்விடத்துச் சோலையின் வாய்ப்பையும் நீர் நிலங்களின் வளங்களையும் இவளுக்கு காட்டி கொடுக்கவேணுமோ?) 3
கரைகொள் பைம்பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு உரைகொள் இன்மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர் திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே.–6-5-3
பதவுரை Show / Hide
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
கரை கொள் பைம்பொழில் கண்பணை,Karai kol paimpozhiL kanpanai - தாமிரபரணிக்கரையைக் கபளீகரிக்கின்ற பரந்த சோலைகளையும் குளிர்ந்த நீர்நிலங்களையுமுடைத்தான
துலை வில்லிமங்கலம்,Tholai villimangalam - இரட்டைத்திருப்பதியிலே
உரை கொள் இன்மொழியாளை நீர்கொண்டு புக்கு,Urai kol inmozhiyaalai neerkondu pukku - புகழ்மிக்க இன்சொல்லை யுடையளான இப்பெண்பிள்ளையை நீங்கள் அழைத்துக்கொண்டு சென்று
உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,Umakku aasai indri akatrineer - மறுபடியும் நீங்கள் இவளோடு உறவு பண்ணுகைக்கு ஆசையில்லாதபிடி உறவறுத்துக்கொண்டீர்கள்(அது எங்ஙனம் தெரிகிறதென்றால்)
(இவள்),(Ival) - இப்பெண்பிள்ளையானவள்
திரை கொள் பௌவத்து சேர்ந்ததும்,Thirai kol pouvathu serndhathum - அலைகளைக் கொண்ட திருப்பாற்கடலிலே (ஆச்ரித ரக்ஷணார்த்தமாக) வந்து சேர்ந்தபடியையும்
திசை ஞாலம் தாவி அளந்ததும்,Thisai gnaalam thaavi alandhathum - திசைகளோடு கூடின பூமியை முழுவதும் தாவி அடிக்கீழிட்டுக் கொண்டபடியையும்
நிரைகள் மேய்த்ததுமே,Niraigal meiththathume - பசுக்கூட்டங்களை மேய்த்தபடியையுமே
பிதற்றி,Pithatri - வாய்வெருவி
நெடு கண் நீர் மல்க நிற்கும்,Nedukann neer malga nirkum - தனது நெடிய கண்களில் நீர்பெருக நிற்கின்றாள்.