திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3276 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3276திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் சம்ருத்தமான திருத் தொலை வில்லி மங்கலத்தைக் கண்டால் -வேறொன்றும் காண மாட்டாதே எப்போதும் இவள் வாய் விடும் சொல் எல்லாம் ஸூக்ரஹ ஸுந்தர்யனானவனுடைய திரு நாமங்களேயாய் இரா நின்றது என்கிறாள்.) 6
நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம் நோக்கு மேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும் வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6
பதவுரை Show / Hide
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
நோக்கும் பக்கம் எல்லாம்,Nokkum pakkam ellam - பார்த்த பார்த்த விடமெல்லாம்
ரும்பொடு செந்நெல் ஒங்கு,Rum podu sennel oongu - கரும்பும் செந்நெற்பயிர்களும் உயர்ந்து விளங்கப்பெற்றதும்
செம் தாமரை வாய்க்கும்,Sem thamarai vaaykkum - செந்தாமரைகள் நிரம்பப்பெற்றதும்
தண்,Than - குளிர்ந்ததுமான
பொருநல்,Porunal - தாமிரபரணிநதியினுடைய
வடகரை,Vadakarai - வடகரையிலேயுள்ளதாய்
வண்,Van - சகலவிதமான அழகும் பொருந்தியதான
துலைவில்லி மங்கலம்,Tholaivilli mangalam - துலைவில்லித் திருப்பதியை
நோக்கும் எல்,Nokkum el - (இப்பெண்பிள்ளை) பார்தாளாகில்
அத் திசை அல்லால் மறுநோக்கு இலள்,Ath thisai allal maru nokku ilal - அந்தத் திக்கு ஒன்று தவிற வேறெவ்விடத்தும் நோக்குடையவல்ளல்
வைகல் நாள் தொறும்,Vaigal naal thorum - ஒரு நொடிப்பொழுதும் விச்சேதமில்லாமல் ஸகலகாலமும்
இவள் வாய்கொள் வாசகமும்,Ival vaaykol vaasagamum - இவளது வாக்கில் வெளிவருகின்ற சொற்களும்
மணிவண்ணன் நாம்மே,Manivannan naamme - நீலமணிவண்ணனான எம்பெருமானுடைய திருநாமங்களேயாம்.