Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3277 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3277திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-5-7- அநந்தரம் -மஹா உபகாரனான சர்வேஸ்வரன் இவளுக்குப் பண்ணின அதிசயம் இருந்த படி -வேறொரு வார்த்தையும் கேளாதே – அவனுடைய திவ்ய சிஹ்னங்களும் திரு நாமங்களும் தாம் திருந்தும்படி இவள் வாக் விஷயமாயிற்று என்கிறாள்.) 7
அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
அணி மா மயில் சிறு மான் இவள்,Ani maa mayil siru maan ival - அழகிற் சிறந்த மயில்போன்றும் சிறிய மான்பேடை போன்றுமிராநின்ற இப்பெண்பிள்ளை
நம்மை கைவலிந்து,Nammai kaivalinthu - நம்மைக் கைவிட்டொழிந்து
துலைவில்லிமங்கலம் என்று அல்லால் என்ன வார்த்தையும் கேட்க உறாள்,Tholaivillimangalam endru allal enna vaarthaiyum ketka ural - துலைவில்லித் திருப்பதிப் பேச்சுதவிர வேறு எந்தப்பேச்சும் கேட்க விரும்புகின்றிலள் (இப்படியானவிது)
மூன்காம் நோற்ற விதி கொலோ,Moonkaam notra vidhi kolo - முன்பு செய்த ஸுக்ருத பலனோ!
முகில்வண்ணன் மாயம் கொலோ,Mugilvannan maayam kolo - மேகவண்ணனான எம்பெருமானுடைய ஸங்கல்பமோ!
அவன் சின்னமும் திரு நாமமும்,Avan sinnammum thiru naamamum - அப்பெருமானுடைய லக்ஷணங்களும் திருநாமங்களும்
திருத்த இவள் வாயனகள் ஏ,Thirutha ival vaayanakal e - மிகத் திருத்தமாக இவளுடைய வாகில் விளங்கும்படி என்னே!