திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3278 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3278திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -திருத் தொலை வில்லி மங்கலம் திருவடி தொழுத அன்று தொடங்கி என்றும் அரவிந்த லோசனன் என்கிற திரு நாமத்தையே சொல்லி சிதிலையாகா நின்றாள் -என்கிறாள்.) 8
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம் கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும் இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8
பதவுரை Show / Hide
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும்தாம்,Thirundhu vedhamum velviyum thirumaa makalirum thaam - பரிசுத்தமான வேதங்களும் வேதோக்த கருமங்களும் ஸம்பத் ஸம்ருத்யுமாகிறவிவை
மலிந்து இருந்து வாழ்,Malindhu irundhu vaazh - நிரம்பியிருந்து விளங்கப்பெற்றதாய்
பொருநல் வடகரை,Porunal vadakarai - தாமிரப்பரணியின் வடகரயிலுள்ளதாய்
வண்,Van - தர்சநீயமான
தொலைவில்லிமங்கலம்,Tholaivillimangalam - தொலைவில்லித் திருப்பதியை
கரு தட கண்ணி,Karu tada kanni - கறுத்துப்பெருத்த கண்களைடையளான இப்பெண்பிள்ளை
கை தொழுத அ நாள் தொடங்கி இ நாள் தோறும்,Kai thozhutha a naal thodangi i naal thorum - அஞ்ஜலிபண்ணினவன்று தொடங்கி இன்று வரையிலும்
இருந்து இருந்து,Irundhu irundhu - இடையிடையே ஏங்கியேங்கியிருந்து
அரவிந்த லோசன என்று என்றே,Aravinda lochana endru endrae - தாமரைக் கண்ணனை பலகாலு மழைத்து
நைந்து இரங்கும்,Naindhu irangum - பலபடியாலும் சிதிலையாக நின்றாள்.