திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3279 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3279திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்பெண் பிள்ளையுடைய மநோ வாக் காயங்கள் மூன்றும் எம்பெருமான் பக்கலிலே மிகவும் பிரவணம் ஆயிற்றன என்கிறாள்.) 9
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால் துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9
பதவுரை Show / Hide
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
இவள்,Ival - இப்பெண் பிள்ளையானவள்
நான் தொறும் இரங்கி வாய் வெரீஇ,Naan thorum irangi vaai verii - நாடோறும் நெஞ்சழிந்து வாய்வெருவி
கண்ண நீர்கள் அலமர,Kanna neergal alamara - கண்ணீர் பெருக வியாகுலப்பட்டு நின்று
மரங்களும் இரங்கும் வகை,Marangalum irangum vakai - மரங்களுங்கூட இங்கும்படியாக
ஓ மணிவண்ண என்று கூவும்,O manivanna endru koovum - ஓ மணிவண்ணனே! எனறு கூப்பிடாநின்றாள், (அதுவுமல்லாமல்)
துரங்கம் வாய் பிளந்தான் உறை துலைவில்லிமங்கலம் என்று,Thurangam vaai pilandhaan urai tholaivillimangalam endru - குதிரைவடிவு கொண்டு வந்த அசுரனுடைய வாயைப்பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்கின்ற துலைவில்லித்திருப்பதியென்று
அவ் ஊர் திருநாமம் கற்றதன் பின்னை,Av oor thirunamam katrathan pinnai - அவ்வூர்த்திருநாமத்தைக் கற்ற பின்பு
தன் காங்கள் கூப்பி தொழும்,Than kaangal kooppi thozhum - தன் கைகளைக் கூப்பி (அவ்வூரை நோக்கி)த் தொழுகின்றாள்.