| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3281 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (இத்திருவாமொழி கற்பவர் கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற மஹாபலத்தைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன் முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11 | தேவபிரானையே தந்தை தாய் என்று,Thevapiraanaiye thandhai thay endru - தேவ பிரானையே ஸகலவித பந்துவுமாக அறுதியிட்டு சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அடைந்த,Sinthaiyaalum sollaalum seykaiyinaalum adaintha - முக்யு காரணங்களாலும் ஆச்ரயித்த வண் குருகூரவர் சடகோபன்,Van kuru Kooravar Sadagopan - ஆழ்வார் முந்தை ஆயிரத்துள்,Mundhai aayiraththul - அனாதியான இவ்வாயிரத்திலுள்ளளே துலைவல்லி மங்கலத்தை சொன்ன இவை செந்தமிழிபத்தும் வல்லார்,Thulaivalli Mangalaththai sonna ivai senthamizh paththum vallaar - துலைவில்லித் திருப்பதி விஷயமாக அருளிச்செய்த இப்பதிகத்தை ஓதவல்லவர்கள் திருமாலுக்கு அடிமை செய்வார்,Thirumalukku adimai seyvaar - பரவாஸு தேவனுக்கு நித்யகைங்கர்யம் பண்ணப் பெறுவர்கள். |