| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3282 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இவன் உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய குண சேஷ்டிதாதிகளிலே அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள்.) 1 | மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு நீலக் கருநிற மேக நியாயற்கு கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர் ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1 | மாலுக்கு,Maalukku - அடியார் பக்கலில் வியாமோஹமுள்ளவரும் வையம் அளந்த மனாளற்கு,Vaiyam alanda manaalarukku - பூமி முழவத்தையும் (த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட மணவாளரும் நீலம கருநிறம் முகம் நியாயற்கு,Neelama karuniram mugam niyaayarkku - நெய்த்துக் கறுத்த நிறத்தையுஐடய மேகத்தை யொத்தவரும் கோலம் செம் தாமரை கண்ணற்கு,Kolam sem thaamarai kannarkku - அழகிய செந்தாமரை போன்ற திருக்கண் களையுடைவனாவருமான எம்பெருமான் விஷயத்தில் ஈடுபட்டதனால் என் கொங்கு அவர் ஏலம் குழலி இழந்து சங்கு,En kongu avar yaelam kuzali izhandhu sangu - தேனொழுகும் மலர்களணிந்து நறுமணம் மிக்க கூந்தலை யுடையனாள என்மைகள் இழந்த்து கைவளையாம். |