திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3283 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3283திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திரு உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய ஸ்ரீ பஞ்சாயுத தாரணத்தாலே வந்த அழகிலே அகப்பட்டு என் மகள் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் -என்கிறாள்.) 2
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என் மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2
பதவுரை Show / Hide
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு,Sangu vil vaal thandu chakkaram kaiyarkku - பஞ்சாயுதங்களையும் திருக்கையிலே உடையவரும்
செம் கனி வாய் செய்ய தாமரை கண்ணற்கு,Sem kani vaai seyya thaamarai kannarkku - சிவந்த கனிபோன்ற அதரத்தையும் செந்தாமரைக் கண்களையுமுடையவரும்
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு,Kongu alar than am thuzhaai mudiyaanukku - தேனொழுகப் பெற்றுக் குளிர்ந்தழகிய தருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவருமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
எள் மங்கை இழந்த்து,El mangai izhandhu - என்பெண்பிள்ளை யிழந்தது
மாமை நிறம்,Maamai niram - அழகிய நிறமாம்.