திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3285 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3285திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் தன்மகன் பண்பிழந்தாளாகக் கூறுகின்றாள் பண்பாவது இயற்கையான தன்மை எம்பெருமானது ஒரோ குணங்களை நினைத்து விகாரப்படுகின்றாளென்றவாறு.) 4
பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு மாடுடை வையம் அளந்த மணாளற்கு நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4
பதவுரை Show / Hide
பீடு உடை நான்முகனை,Peedu udai naan muganai - பெருமைபொருந்திய பிரமனை
படைத்தானுக்கு,Padaiththaanukku - (தனது திருநாபிக்கமலத்தில்) படைத்தவனும்
மாடு உடை வையம்,Maadu udai vaiyam - வஸுமதியான பூமயை
அளந்த மணாளற்கு,Alanda manaalarukku - (திரிவிக்கிரமனாகி) அளந்துகொண்ட மணவாளனும்
நாடு உடை மன்னர்க்கு,Naadu udai mannarukku - நாட்டுக்கு கடவரான பாண்டவர்களுக்காக
தூது செல் நம்பிக்கு,Thoothu sel nambikku - தூது சென்றவனுமான பெருமான் விஷயத்தி லீடுபட்டதனால்
என் பாடு உடை அல்குல்,En paadu udai algul - பரந்தநிதம் பத்தையுடையளான என்மகள்
இழந்த்து பண்பு,Izhandhu panbu - இழந்த்து தன் இயற்கையை.