| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3286 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் தன்மகள் கற்பிழந்தாளாகக் கூறுகின்றாள். “கற்பு – கல்வி, அதாவது ஜ்ஞானம்“ என்பது ஈடு. தன்னறிவையிழந்தாளென்றபடி) 5 | பண்புடை வேதம் பயந்த பரனுக்கு மண்புரை வையம் இடந்த வராகற்கு தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என் கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5 | பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு,Panbu udai vedham payantha paranukku - சீர்மைமிக்க வேதங்களை (ப்பிரமனுக்கு) உபகரித்தருளின பரம புருஷனும், மண்புரை இடந்தவராகற்கு,Manpurai idanthavararkku - மண்மிக்க பூமியை யிடந்தெடுத்த வராஹமூர்த்தியும், தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு,Then punal palli em deva praanukku - தெளிந்த நீரையுடைய ஏகார்ணவத்திலே பள்ளிக்கொண்ட தேவபிரானுமான எம்பெருமான் விஷயத்தில் (ஈடுபட்டு) என் கண்புனை கோதை இழந்தது,En kanpunai kodhai izhandhadhu - கண்ணைக்கவர்கின்ற கூந்தலையுடையளான என் மகள் இழந்தது. கற்பு,Karpu - அறிவுடைமை. |