| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3287 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் “தோற்றது மெய்யே“ என்று, தன்மகள் சரீரத்தை இழந்தாளாகச் சொல்லுகிறாள்) 6 | கற்பகக் காவன நற்பல தேளாற்கு பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என் விற் புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6 | கற்பகம் கா அனநல் பல தோளற்கு,Karpagam kaa ananal pala tholarkku - கற்பகச்சோலைபோன்ற நல்ல பல திருத்தோள்களையுடையவனும் சுடர் பொன் குன்று அன்ன பூ தண் முடியற்கு,Sudar pon kundru anna poo than mudiyarkku - சுடர்மிக்க பொற்குன்றம் போன்ற மிகவழகிய திருவபிஷேகத்தை யுடையவனும் நல் பல தாமரை நான் மலர் கையற்கு,Nal pala thaamarai naan malar kaiyarkku - அப்போதலர்ந்த தாமரைப் பூப்போன்று விலக்ஷணமான பல திருக்கைகளையுடையவனுமான எம்பெருமான் திறத்திலீடுபட்டதனால் என் வில் புருவம் கொடி,En vil puruvam kodi - வில்போன்ற புருவத்தை யுடையளான என் பெண்கொடி தோற்றது,Thoatradhu - இழந்தது மெய்,Mey - தன்னுடம்பையாம். |