Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3288 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3288திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் “என்தையலிழந்த்து தன்னுடைச் சாயே“ என்கிறாள். சாயா என்னும் வடசொல் எனத் திரிந்த்து. சாயை யாவது ஒளி. லாவண்ய மிழந்தாளென்கை. உரு வேறுபாடுற்ற ளென்றவாறு.) 7
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு,Mei amar pal kalannku aninthaanukku - திருமேனிக்குபொருத்தமன பல திருவாபரணங்களை நன்றாக அணிந்து கொண்டிருப்பவனும்
பை அரவு இன் அணை பள்ளியினானுக்கு,Pai aravu in anai palliyinaanukku - படமெடுத்த ஆதிக்ஷேனாகி இனிய படுக்கையிலே துயிலமர்ந்தவனும்
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு,Kaiyodu kaal seyya kannapiraanukku - திருக்கைகளும் திருவடிகளும் சிவந்திருக்கப்பெற்றவனுமான கண்ணபிரான விஷயத்திலீடுபட்டதனால்
என் தையல் இழந்த்து,En thaiyal izhandhu - என் மகள் இழந்தது
தன்னுடை சாயே,Thannudai saaye - தனது ஒளியாம்.