| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3290 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் என்மகள் அழகிழந்தாளென்கிறாள். தன்னழகாலே அவனைவசப்படுத்திக் கொள்ள பிறந்தவிவள் அவனழகிலே யீடுபட்டுத் தன்னழகை யிழந்தாளென்று வருந்துகிறாள்.) 9 | மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என் பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9 | மாண்பு அமை கோலத்து,Maanpu amai kolaathu - அழகமைந்த வடிவையுடையனான எம் மாயம் குறளற்கு,Em maayam kuralarku - எம்மையீடுபடுத்திக்கொள்ளும் மாயவாமனமூர்த்தியும் சேண் சுடர் குன்று அன்ன,Senn sudar kunru anna - உயர்ந்த சோதிமயமான குன்று போன்ற செம் சுடர் மூர்த்திக்கு,Sem sudar moorthikku - செவ்விய சுடரையுடைய வடிவு கொண்டவனும் காண் பெருதோற்றத்து,Kaan perudhoatrrathu - அனைத்துலகும் காணப்பர்வத்தையுடைய என் காகுத்தன் நம்பிக்கு,En kaakuthan nambikku - இராமபிரானுமான பெருமான் விஷயத்திலீடுபட்டதனால் என் பூண் புனைமென் முலை,En poon punaimen mulai - ஆபரணங்களையணிந்தமெல்லிய முலைகளை யுடையளான என்மகள். தோற்றது பொற்பு,Thoatrrathu porupu - இழந்தது அழகாம் |