Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3291 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3291திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்ல் “என் கற்புடையாட்டி யிழந்தது கட்டே“ என்கிறாள் திருத்தாய். கட்டு என்பதற்கு ஸ்த்ரீத்வமர்யாதை என்றும் பொருள், “எல்லாம்“ என்றும் பொருள். ஸ்த்ரீ த்வமர்யாதையையிழக்கையாவது – லஜ்ஜையோடும் அடக்கத் தோடும் கூடியிருக்கவேண்டிய தன்மையை இழத்தலாம். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொன்றை யிழந்தாளாகச் சொல்லிவந்தான். பலசொல்லியென்? இழவாதது ஒன்றுண்டோ? எல்லாமுமிழந்தாள் என்கிறாள்.) 10
பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10
பொற்பு அமை நீள் முடி,Porpu amai neel mudi - அழகமர்ந்து உயர்ந்த கிரீடத்திலே
பூ தண் துழாயற்கு,Poo than thulaayarukku - அழகியகுளிர்ந்த திருத்துழாயையுடையவனும்
மல் பொரு தோள் உடை,Mal poru thol udai - மல்லர்களோடு போர்செய்த திருத்தோள்களையுடையவனும்
மாயம் பிரானுக்கு,Maayam pirankku - அற்புதச் செயல்களைச் செய்யும் மஹோபகாரகனும்
நிற்பன பல் உரு ஆய் நிற்கும்,Nirpana pal uru aai nirukkum - ஸ்தாவர ஜங்கமங்களாய் நிற்கின்ற பலவகைப் பதார்த்தங்களுமாயுள்ளவனும்
மாயற்கு,Maayarkku - (அப்படியிருக்கச் செய்தேயும் அவற்றின் குற்றங்கள் தன்மீது ஏறப்பெறாமலிருக்கும்) மாயனுமான பெருமான் திற திலீடுபட்டதனால்
என் கற்புடையாட்டி,En karputaiyaatti - தக்க அறிவுடையளான என் மகள்
இழந்தது கட்டு,Ilandhadhu kattu - இழந்தது எல்லாமுமாம்.