| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3292 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது. முழுதுமும் மிக அழகாக விளங்குகின்ற சோலைகளையுடைத்தான திருவேங்கட மலையிலே நித்ய வாஸம் செய்தருளா நின்ற பெருமான் விஷயமாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகம் வல்லார் ஸ்வரூபாநுபமான திவ்ய போகத்தை அநுபவிக்கப்பெறுவர்களென்று பயனுரைத்ததாயிற்று. கீழ்ப் பத்துப் பாசுரங்களிலும் திருவேங்கட முடையானுடைய ப்ரஸ்தாவமே இல்லாமலிருக்க இப்போது நிகமத்தில் “நல் வேங்கடவாணனை“ என்று கூறினவிது என்னே? எனின், கிழே மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதத்தில் * தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானையென்னப்ப னெம்பெருமானுளனாக – என்னாவிலின்கவி யானொரு வர்க்குங் கொடுக்கிலேன் * என்றருளிச் செய்தவராகையாலே இங்ஙனே கூறக்குறையில்லை யென்பர்) 11 | கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக் கட்டெழில் தென் குருகூர்ச் சட கோபன் சொல் கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11 | கட்டெழில் சாலை,Kattezhil saalai - நறுமணம் மிக்க சோலையையுடைத்தான நல் வேங்கடம் வாணனை,Nal vengadam vaananaai - திருவேங்கட மலையிலே வாழ்பவனான எம்பெருமான் விஷயமாக கட்டெழில் தென்குருகூர் சடகோபன்சொல்,Kattezhil thengurukoor sadagopan sol - அரணழகு பொருந்திய தென்குருகூரில் அவதரித்த ஆழ்வார் அருளிச்செய்த கட்டெழில் ஆயிரத்து,Kattezhil aayiraththu - தொடையழகையுடைத்தான ஆயிரத்தினுள்ளே இ பத்தும் வல்லவர்,ePathum vallavar - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் கட்டெழில் வானவர் போகம்,Kattezhil vaanavar pogam - பரமவிலக்ஷணமான நித்யஸூரிபோகத்தை உண்பார்,Unbaar - அனுபவிக்கப் பெறுவர்கள். |